அண்ணா நூல்கள் பற்றிய என் வேண்டுகோள்

பன்மொழிப்புலவர் அப்பாத்துரையார் நூல்களை தமிழக அரசு நாட்டுடைமை ஆக்கிய பொழுது நான் வெளியிட்ட அறிக்கையில் நாட்டுடைமை ஆக்கி குடும்பத்தவர்களுக்கு நிதி அளிப்பதை பாராட்டலாம்.ஆனால் அந்த அறிஞரின் நூல் மக்களிடையே பரவ வேண்டுமானால் அரசே வெளியிட்டு தமிழக மாணவரிடையே இலவயமாக தர வேண்டும் என்று கோரி இருந்தேன்.

அண்ணாவின் நூல்கள் அரசு வெளியீடாக வர வேண்டும் என்பது அப்போது முதல் அண்ணா நூல்கள் பற்றிய என் வேண்டுகோள் யார் காதிலும் விழவில்லை.எனவே திராவிடப் பேரவை சார்பில் என்றால் கட்சி என்றாகிவிடும் என்று தமிழரிடையே கட்சிகளால் ஏற்பட்ட பண்பாட்டுப் பின்னடைவுகள் என மலேசியத் தமிழ்க்குயில் கலியபெருமாள் தொகுத்த உலகத் தமிழ்ப் பண்பாட்டுக் களஞ்சியத்தில் எழுதிய நான் அஞ்சினேன்.அறிஞர் அண்ணா அறக்கட்டளை சார்பில் அனுப்பமுடிவு செய்தோம்
 
பண்பாளர் பொள்ளாச்சி நசன் உடன் பதில் விடுத்தார். கல்வெட்டு ஆய்வறிஞர் விசய வேணுகோபால் அவர்கள் முயற்சியை வரவேற்றதோடு இதற்கென் அறிஞர் குழு அமைத்து நூல் தொகுதி சிறப்புற வருதல் வேண்டும் என கருத்துச் சொன்னார்கள். அதை ஏற்று அவரையே முதல் உறுப்பினராக இருக்குமாறு கேட்டு அவரும் இசைவு நல்கியுள்ளார்.பல அறிஞர்களும் இதில் இணைக்க அணியமாய் உள்ளோம். பிரான்சில் இருந்து தமிழ் நாவலாசிரியர் நாகரத்தினம் கிருட்டிணா நிதி நல்க முன் வந்தார்கள். அறிஞர் அண்ணா 1967 தேர்தலுக்கு நிதி திரட்டும் போது நான்கணாவுக்கு கொடிகளை சட்டையில் குத்தி மக்களிடம் நிதி திரட்டியது போல சிறு சிறு தொகையாக திரட்டி மக்கள் பங்கேற்புடன் அண்ணாவின் நூல் தொகுதிகளை கொண்டு வர எண்ணம்.
 
ஒவ்வொரு ஊரிலும் உள்ள அறிஞர் அண்ணா சிலை முன்பும் ஒரு நாள் உண்ணாமல் இருந்து மக்களிடம் பிச்சை எடுத்து அண்ணாவின் நூல்களை வெளிக்கொணர நினைத்து அப்படியே துண்டறிக்கை முதலில் தயார் ஆனது.நண்பர்கள் சிலரது வேண்டுகோள் ஏற்று அப்பகுதி நீக்கப்பட்டது.
 
காரைக்கால்-நாகூர் ரயில் பாதைத்திட்டத்திற்கு 66 கோடி மதிப்பீடு.புதுவை அரசு இரங்கசாமி ஆண்ட போது மாநில அரசின் பங்கான் 33 கோடி தரக் கோரி நடுவண் அரசு பல முறை கேட்டும் தரவில்லை. காரைக்காலில் நடந்த ஒரு போராட்டத்தில் திடீரென்று தொலைக்காட்சிகள் முன்பாக மக்களிடையே பிச்சை எடுத்து கிடைத்த 231 ரூபாயை நடுவண் அமைச்சராக் அப்போது இருந்த லல்லு பிரசாத்துக்கு அனுப்பினோம்.

 ஒவ்வொருவரும் தினமும் ஒரு ரூபாயை ஒரு ரூபாய் கட்டணமாக் அஞ்சலகத்தில் செலுத்தி தினமும் 15 நாள் நாள்தோரும் நூற்றுக்கணக்கில் ஒரு ரூபாய் பணவிடைத்தாள்கள் லல்லு வீட்டுக்குச் செல்லவே நடுவணரசே முழுத்தொகையான 66 கோடியை தரும் என லல்லு அறிவித்து இன்று அத்திட்டம் இவ்வாண்டு இறுதிக்குள் நிறைவடைய உள்ளது.

இந்த முன்னனுபவம் காரணமாகவே அண்ணா நூல்களுக்காக பிச்சை எடுக்கும் திட்டம் தீட்டப்பட்டது.
 
முன்பதிவுத் திட்டவிலை முழவதும் ஆவணங்கள் திரட்டப்பட்டால் தான் எத்தனை பக்கங்கள் என்பதும் எவ்வளவு விலை என்பதையும் இறுதி செய்ய முடியும். ஆவணங்களை தேடவே சிறிதளவு உதவிகள் தேவைப்படுகின்றன். பிறகு முன்பதிவு விலை தந்தால் போதும். பிற நாடுகளுக்கும் பிற நாட்டுப்பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பும் போது தான் நிதி தேவை.
 
உங்களிடமிருக்கும் அண்ணா இதழ்களும் புகைப்படங்களுமே இப்போதய தேவை.உங்கள் மடல்களும் முன்பதிவு நூல் வரும்போது வாஙக எத்தனை பெயர் இசைவு நல்கியுள்ளனர் என்ற கணக்குமே இன்று எஙகள் எதிர்பார்ப்பு.

நந்திவர்மன்.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s