DRAVIDA PERAVAI

The Voice of Global Tamils

மொழிகளும் மதங்களும் மனிதகுலமும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிந்தவையே — January 5, 2009

மொழிகளும் மதங்களும் மனிதகுலமும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிந்தவையே


– நா.நந்திவர்மன் பொதுச்செயலர், திராவிடப்பேரவை

பிரித்தானிய ஒலிபரப்புச் சேவை (பிபிசி) அறிவியல் | இயற்கை பகுதியில் 14.8.2002 ல் ஒரு செய்திவெளியாயிற்று “முதன்மொழி மரபணு கண்டுபிடிக்கப்பட்டது” என்று அந்தச் செய்தி அறிவித்தது. மாந்தன் பேசும் திறன் பெறக் கரணியான பல மரபு அணுக்களில் முதன்மயான மரபணுவை கண்டுபிடிதது் விட்டதாக அறிவியல் அறிஞர்கள் நம்புகின்றனர்.

இந்த மரபணு இல்லாவிட்டால் மொழியும் மாந்தகுலப் பண்பாடும் மலர்ந்திருக்க முடியாது. ஈறிலக்கம் ஆண்டுகள் கடந்து மனிதன் கண்டு வரும் ( பரிணாம) கூர்தலற வளர்ச்சியின் உந்தாற்றலாக இம்மரபணுவில் தோன்றும் தலையாய மாறுதல்கள் கரணியமாகின்றன. மாந்தன் பேசும் மொழியோடு உறுதியாகத் தொடர்புடைய அந்த மரபணுவுக்கு ‘Fox P 2’ என்று குறியீட்டுப் பெயர் சூட்டியுள்ளனர்.

“பலமொழி மரபணுக்கள் கண்டுபிடிப்பதற்கு முன்னோட்டமாகக் கண்டுபிடிக்கப்பட்ட முதன்மயான மரபணு” என வால்ப் காங்கு ஈனார்டு கூறுகிறார். செருமனியில் உள்ள இலீப்ழிக் நகரில் உள்ள Max Planck Institute for Evolutionary Anrthropology’ எனும் நிறுவனப் பேராசிரியர் அவர். 10 முதல் 1000 வரை இது போன்ற மரபணுக்கள் இருக்கலாம் என்கிறார் அவர்.

உலகெங்கும் மரபணு பற்றி பல்வேறு ஆய்வுகள் நடக்கின்றன. அதில் சுவையான செய்திகள் வெளிவந்த வண்ணமுள்ளன. மனிதனும் எலியும் ஒன்றுவிட்ட சகோதரர்களாம். டனோசரசு என்ற விலங்கினம் உலகினினின்று அழிந்த இறுதிக் கட்டத்தில் ஒரு சிறிய உயிரியிலிருந்து மனிதனும் எலியும் வேறு வேறாகப் பிரிந்தனவாம். இரண்டும் பிரிந்து தனித்தனி உயிர்களாகி 75 மில்லியன் ஆண்டுகளாகி விட்டன. எலிக்குள்ள 30000 மரபணுக்களில் சுமார் 1% விழுக்காடு அதாவது சுமார் 300 மரபணுக்கள் மனிதனிடம் இல்லை.

அரிசியின் மரபணுக்களை படமாக்குதல் என்று ஒரு அனைதது்லகத்திட்டம் உண்டு. ஒவ்வொரு Molecule அரிசியினுள்ளும் 12 இணை Chromosome உள்ளன. இவைகள் கட்டமைக்கப்படுவதற்கு காரணமான குறியீட்டு மொழிகள கண்டறிய 400 மில்லியன் கட்டளை எழுத்க்களை படமாக்குதல் இத்திட்டத்தின் நோக்கமாகும். International Rice Genome Project II முடித்து II வது கட்ட ஆய்வுக்கு இந்தியா முற்பட்டுள்ளது.

ஒரு மனிதனின் உடலில் 30,000 முதல் 40,000 மரபணுக்கள் இருந்தால் இந்திகா அரிசியில் 45,000 முதல் 56,000 வரை மரபணுக்கள் உள்ளன. சப்பானியர் அரிசியில் 63,000 மரபணுக்கள் மனிதனைக் காட்டிலும் அரிசியில் கூடுதலாக உள்ளன. அரிசியில் உள்ள மரபணுக்கள் வேறு சில செடி கொடிகளிலும் பொதுவாகக் காணப்படுகின்றன. அறிவியல் பல புதிர்களுக்கு இவ்வாறு விடைதேடிய வண்ணமுள்ளது. முடிவு உடனே கட்டத் தேவையில்லை, இத் தேடல்களுக்கு முழு உண்மை புலப்படும் வரை! ஆனால் கடவுளை கற்பித்து அந்தக் கற்பனையை வைத்துப் பிழைக்க மதங்களை உருவாக்கிக் கொண்டவர்கள் உண்மைகள் வெளிப்பட்டு விடக்கூடாது என்று அஞ்சுகின்றனர். உண்மைகள் வெளி வந்தால் தங்கள் பிழைப்பு பறி போய்விடும் என்று அஞ்சுகின்றனர். உலக முதன் மாந்தன் – உலக முதன்மொழி உலக முதல் வழிபாடு உலகின் முதல் பண்பாடு என்று உலகில் உண்மையான வரலாறு கட்டமைக்க ஓயாமல் உழத்தாக வேண்டும் உண்மைகள் ஊர்வலம் வரும் வரை!

நம் ஊர் அறிஞர்களையே முழுமையாக அறிந்து கொள்ளாதவர்கள் நாம். நம்நாட்டு பல மாநிலங்களையே நன்கறியாதவர்கள் நாம். நம நாட்டை ஒட்டியுள்ள அண்டை நாடுகளைப் பற்றி ஒன்றுமே தெரியாதவர்கள் நாம். நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்று கூடத் தெரியாதவர்களுக்கு உலகில் பல்துறை அறிஞர்கள் ஈடுபட்டுள்ள தேடல் தெரியவா போகிறது.

ஜேம்சு ஏ. மதிசாப் மொழியியல் அறிஞர். திபேத்திய பர்மிய மொழி பற்றிய ஆய்வில் ஈடுபட்டுள்ளவர். 1968ல் சீன-திபேத்திய மொழிகளுக்கான அனைத்துலக மாநாட்டை முன்னின்று நடத்தியவருள் ஒருவர். சீன-திபேத்திய மொழிகளின் சொற்பிறப்பியல் அகர முதலி மற்றும் நிகண்டு தொடர்பான பணிகளில் 1987 முதல் உழைப்பவர். அவர மின்னஞ்சல் முகவரி matisoff@socrates.berkeley.edu. தமிழ் உலக முதன்மொழி என நிறுவ தமிழுக்கும் சீன-திபேத்திய மொழிகளுக்குமுள்ள உறவை ஆய்வு செய்ய சீன-திபேத்திய சொற்பிறப்பியல் அகராதி உதவக்கூடும். அந்த அறிஞருடன் தமிழ்ச் சொற்பிறப்பியல் ஆய்வில் தோய்ந்த அறிஞர்கள் இணைந்தால் இருதரப்பு ஆய்வும் மேம்பாடடையும். உலக மக்கட் தொகயில் கால்பங்கினர் சீன-திபேத்திய மொழிக்குடும்ப மொழிகறைப் பேசுகின்றனர். சுமார் 250 முதல் 300 மொழிகள் இம்மொழிக்குடும்பத்தச் சார்ந்தவையாக உள்ளன. சீனம், திபேத்தியம், பர்மியம் தவிர்த்த ஏனைய மொழிகள் இந்நூற்றாண்டு வரை எழுதப்படாத மொழிகள்.

மொழியியல் அறிஞர் சோசப் கிரீன்பர்கு ஆப்ரிக்காவின் பன்னூறு மொழிகளை ஆய்வு செய்தார். ஆப்ரோ-ஏசியாடிக், நகர்-காங்கோ, கோசான் என்ற மூன்று பகுப்புகளாக ஆப்ரிக்க மொழிகளைப் பிரிப்பார்கள். சோசப் கிரீன்பர்கு நரோ-சகாரன் என்பதைக் கண்டுபிடித்தார். அதன்பிறகு ஆப்ரிக்க மொழிகளை ஒவ்வொன்றுக்குமுள்ள உறவு, மக்கள் பரவல் பற்றிய புதிய உண்மைகள் கண்டறியப்பட்டன. ஆப்ரிக்காவுக்கும் குமரிக்கண்டத்துக்கும் நிலவியல் தொடர்புகள் இருந்தன எனக்கூறி வருகிறோம். உலகின் முதல் மனிதன் கறுப்பிரினத்தவன் (நீக்கிராய்டு) என்றும் ஆய்வுகள் கூறிவருகின்றன. நாமும் நீக்கிராய்டுகளே! நம் மொழிகளுக்கும் ஆப்ரிக்க மொழிகளுக்கு முள்ள உறவு பற்றி ஆய சோசப் கிரின்பர்கின் ஆய்வுகள் பெரிதும் துணைபுரியக்கூடும்.

அண்னையில் மறைந்த இவ்வறிஞரே அமெரிக்காவின் பழங்குடிகள் பேசும் பன்னூறு மொழிகளையும் முப்பதாண்டுகள் ஆய்ந்து மூன்றே குடும்பங்களாகப் பிரித்தார். ஏசுகிமோ (Eskimo-Aleut) நா-தெனே (Na-dane) அமரிந்து (Amerind) என்று பிரித்தார். இந்த ஆய்வுகள் தமிழாய்வுகளுடன் இணைத்து பார்க்கப்பட வேண்டும். ஒப்பீட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

பிரான்சில் ஒரு கிராமப்புறம், சரக் என்ற கிராமம். அங்கே ஒரு புதிர் உள்ளது. அக்கிராம மக்கள் பேசும் பாசக்கு (Basque) மொழியே அப்புதிராகும். பிரான்சுக்கும் இசுபெயின் நாட்டு எல்லைக்கருகில் உள்ள பாசக்கு மக்கள் பேசும் யுசுகரா மொழி (Euskara) அதன் தனித் தன்மையை காத்துவந்துள்ளது. அயலவர் படையெடுப்பை உறுதியுடன் அம்மக்கள் எதிர்த்து வந்துள்ளனர். அண்மையில் இருக்கும் பிரெஞ்சு மொழியோ ஸ்பானிசு மொழியோ யுசுகரா மொழியில் ஊடுருவாமல் தங்கள் மொழியைக் காத்து நிற்கும் அம்மக்களுக்கு தமிழர்கள் பாராட்டு கூறுதல் வேண்டும். அவர்களால் இயன்ற சாதனை நாம் நிகழ்த்தத் தவறியது ஏன் என்றும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அவர்களின் பாறை ஓவியங்கள் ஈராயிரமாண்டு பழமை வாய்ந்தவை என்கின்றனர் அறிஞர்கள். அவர்களின் பாறை ஓவியங்களைப் படித்தறிந்து நம் தமிழ்நாட்டு பாறை ஓவியங்களுடன் ஒப்பாய்வு செய்ய முன்னாள் பிரெஞ்சுப் பகுதியான புச்சேரியின் மொழியியல் பண்பாட்டு ஆய்வு நிறுவனம் முயலலாம்.

ஒரு பழம்பெரும் மொழிக்குடும்பத்திலிருந்தே இன்றைய உலக மொழிகள் இணைந்தன என்பது நாசுதிராதிக் கோட்பாடு. அதில் நம்பிக்கை வைத்தவர் வித்தாலி செடிவோரோசுசின் Vitalg shvoroshkm’ ஆறாயிரமாண்டு பழமை வாய்ந்த மொழிகளை கட்டமைத்து முந்து-நாசுதிராவிக்கு மொழியை கண்டுபிடிக்கலாம் என விளாதிசுலாங் இலியிச் சுவிச்சு நம்புகிறார்.

உலகின் பழமையான அகர முதலிகளையும் இலக்கணங்களையும் துணைக்கு வைத்துக் கொண்டு முந்து-நாசுதிராதிக்கு மொழியைக் கண்டறிய அகரோன் தொல்கோபோலுசுகி (Ahrarom Dolgoplsky) ஈடுபட்டுள்ளார்.

மொழிக் கட்டமைப்பு வரலாறு பத்தாயிரமாண்டு பழமையானது என பெரும்பான்மை மொழியியலறிஞர்கள் நம்புகிறார்கள். ஆயின் பத்திலக்கம் ஆண்டுகள் தாண்டுமளவு பழமை வாய்ந்தது. மாந்த இனம் என்று மொழி தோன்றியது என்று இதனிடையே கண்டுபிடிக்க எவ்வளவு இடர்பட நேரும் என்று நீங்கள் உணர முடியும். நாற்பதாயிரமாண்டு முன்பே மாந்தன் மொழி பேசும் திறன் பெற்றிருந்தான் என கிரிசு இசுடிரிங்கர் கருகிறார். பூம்புகார் 9500 ஆண்டு பழமையானது எனக் கடலடி ஆய்வு கூறுவதால் தமிழரின் சங்க நூல் உள்ளிட்ட நூற்களுக்கு இதுகாறும் கூறிவந்த காலவரையறை மீள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டாக வேண்டும். ஆய்வுக்கு ஓய்வில்ல. அறிஞர்கள் அறிவாராக!

மொழிகள மட்டுமல்ல நதிகளையும் அறிஞர்கள் ஆய்வு செய்கிறார்கள். நதிக்கரையில் மலர்ந்த நாகரிகங்களையும் ஆய்வு செய்கிறார்கள். காவிரியாற்றை ஆய்ந்த அறிஞர்கள் தற்போது தருமபுரி மாவட்டத்தில் உள்ள காவிரிபட்டினம் என்ற இடத்தில் முன்னொரு காலத்தில் காவிரி நதி இல்லை என்கிறார்கள். ‘காவிரி நதி முன் காலத்தில் சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சியை அடுத்து நேர் கிழக்காக காவிரிப்பட்டினம் வாணியம்பாடி வேலூர் வழியாக சென்னைக்கு வடக்காக வங்கக் கடலில் சங்கமம் ஆனதற்கான அதிகாரப்பூர்வ எடுத்க்காட்டுகள் கிடைக்கின்றன. கால ஓட்டத்தில் ஆற்று ஒட்டத்திலும் பல மாற்றங்கள் ஏற்பட்டன என்பதற்குத் தமிழிலக்கியங்களும் சான்றாக உள்ளன. அப்பர் காலத்தில் காவிரி நடுவிலிருந்த திருத்துருத்தி சுந்தரர் காலத்தில் காவிரிக்கரையிலிருக்கும் கோவில் ஆயிற்று. பாடல் பெற்ற பழைய திருக்கழிப்பாலைக் கோயிலை கொள்ளிட வெள்ளம் கொண்டு போய்விட்டது. வடமுல்லை வாயிலுக்கு அருகில் பெரிய மணல்வெளி காணப்படுகிறது. பழங்காலத்தில் பாலாற்றின் கிளை ஒன்று இவ்வழியே சென்று வறண்டது. சுந்தரர் காலத்தில் துறையூர் பெண்ணையாற்றின் வடக்கிலிருந்தது. இப்போது பெண்ணை ஆறு துறையூர்க்கு வடக்காக ஓடுகின்றது. எனவே தற்போதைய பாலாறு பண்டைக் காலத்தில் காவிரி ஆறாக ஓடியது என்ற உண்மையை தளிவாக உணர முடிகின்றது. காவிரி சென்னைக்கு வடக்கில்தான் கடலில் சங்கமம் ஆயிற்று” என அய்தராபத்தில் உள்ள தேசிய தொலை உணர்வு நிறுவன விஞ்ஞானி செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட படங்கள் கொண்டு ஆய்ந்து சொல்லியுள்ளனர்.

கடவுள்களும் கடவுட் கதைகளும் நம்பிக்கைகளும் ஒவ்வொரு நாட்டிலும் எப்படி வந்தன என ஒப்புநோக்குவோர் எல்லாமதமும் ஒன்றே! எல்லா தொன்மங்களும் ஒன்றே! நாடுவிட்டு நாடு நம்பிக்கைகள் ஒரே அடிப்படையில் உருவாகியுள்ளன எனவும் அறிவார்கள்.

ஆப்ரிக்கத் தொன்மங்களில் நிலமும் வானமும் நெடுங்கால முன்பிருந்தே நிலவி வந்ள்ளன என நம்புகிறார்கள். நிலம் மிருதுவாகவும் நீரற்று வறண்டு கிடந்ததாம். யாரோ ஒரு கிழவி நீரைத் திருடிப் பதுக்கி வைத்து விட்டதாக ஒரு கதை உள்ளது. வேறொரு கதை விலங்கு ஒன்று நீரைத் திருடி மறைத்து வைத்தாக உள்ளது இரண்டு கதைகளிலும் மக்கள் தலைவன் (அ) தொன்மத்தலைவன் நீரைத் திருடியவரிடமிருந்து மீட்டு மக்கள் பயன்பாட்டுக்கு அளித்தாகச் சொல்லப்பட்டுள்ளது. அகத்தியர் கமண்டலத்தில் அடைபட்ட காவிரியை காகம் ஒன்று விடுவித்த நம் கதையுடன் இணைத்துப்பாருங்கள்.

வட ஆசியாவின் சபீரியாவ எடுத்துக் கொள்ளுங்கள் கிறித்துவமும் இசுலாமியம் புத்த மதமும் அங்கு நுழையுமுன் பதினாறுக்கும் பதினெட்டாம் நூற்றாண்டுக்குமிடையே சபீரிய மக்களின் மதம் Shamanism ஆகும். Shaman என்ற சொல் துங்குசிக் மொழியில் தீவிர உணர்ச்சி பெருக்கெடுத்து ஆடும் ஒருவனைக் குறிப்பதாகும். உருசியி மொழியிலிருந்து சபீரியா முழுக்க பரவியது. மேற்கு ஐரோப்பிய மொழிகளில் பரவி இன்று வெறியாட்டுக்கு உலகளாவிய அறிவியல் சொல்லாக மாறிவிட்டது. ஆவிகள் பிடித்துக் கொண்ட மனிதன் வெறியாட்டாடி மக்களை மருளச் செய்தான். ஆம் நம் நாட்டு சாமி வந்து ஆடுதலுக்குச் சற்றொப்ப இணையான சபீரிய மதம். சாமி ஆடுபவன் சபீரியாவில் மட்டுமா? இங்கும் போதயில் ஆடுபவனும் சாமியாக வழிபடப்படுவதில் இருந்து உலகெங்கும் மக்கள் நம்பிக்கைகள் ஒரே தன்மையாக உள்ளதை உணரலாம்.

தீ வழிபாடும் சபீரிய மக்களிடம் நிலவியது. அடுப்பை கடவுளாக வழிபட்டனர். சபீரியர்கள். தீயை முதியபெண் வடிவிலும் வழிபட்டார்கள். தீ கிலக்கி என்ற வழிபடு தெய்வமாயிற்று. நெருப்பின் தாய் நானானியன்ச என அழைக்கப்பட்டாள். தீயின் பாட்டி எவென்கி எனப்பட்டாள். எரியும் தீயில் உணவுப்பொருட்களை தூக்கி எறிந்து இதை தீயே நீ உண்டு எமக்கு நல்ல விலங்குகள் வேட்டையில் சிக்கி உணவாக வாழ்த்துவாயாக என சபீரியர்கள் கோருவாராம். தீ வழிபாடு தமிழரிடயே உண்டு என்பதற்கு தமிழில் உள்ள தெய்வம் என்ற சொல்லே சாட்சியாகும். தீயை மூட்டக்கூடிய மரத்தாலான ஞெலிபுகோல் தமிழரிடமிருந்த தொன்முது கருவிகளில் ஒன்று. அதன் திரிபே கல்லால் வடிக்கப்பட்ட சிவலிங்கமாகும். தீயின் நிறம் பற்றியே சிவந்த வடிவினன் எனச் சிவன் உருவகிக்கப்பட்டான். சிவன் படைக்கப்பட்டபோதே தமிழனுக்கு சிகப்புத் தோல் மீது இருந்த மயக்கம் வெளிப்பட்டது. சிவன் முதல் சினிமா நடிகைகள் வரை கருநிறத் தமிழன் சிகப்பு நிறத்திடம் மயங்கி நிற்பது மாறவில்லை. சபீரிய இனக்குழுக்களான சூக்சி, கொரயாக் ஆகியவர்களும் நம ஞெலிபுகோல் போல் மரத்தாலான தீ கட கோலை வைத்து வழிபட்டனர்.

கௌகாசசு பகுதிகளிலும் வீட்டில் உள்ள அடுப்பு கடவுளாக வழிபடப்பட்டது. மலை வாழ் மக்களான இங்குசசு, ஓசசட்டுசு, சியார்சியன்கள் நெருப்பையும் சாம்பலையும் வழிபட்டனர். தீய ஆராதனை காட்டுவதும் சாம்பலை திருநீறெனப் பூசுவதும் நம்மவர் கையாளும் பழக்க வழக்கம். கௌகாசசு பகுதியிலும் அதேபழக்கவழக்கம்! இவை மனித மனம் ஒரே தன்மையில் சிந்தித் வந்துள்ளதை உங்களுக்கு உணர்த்த வில்லயா?

வேளாண்மை தொடர்புடைய வழிபாடுகள், முன்னோர் தொடர்புடைய வழிபாடுகள் என்றுதான் உலகின் பல சமுதாய மக்கள் கடைபிடித்தொழுகியுள்ளனர். வோல்கா பகுதியிலும் மேற்கு ஊரல் பகுதிகளிலும்வசந்த கால விடுமுறைகள் நிலத்தில் உழுவதற்கு தொடங்குவதையும் விதை தூவுவதை ஒட்டியுமே அமைந்தன. சிறப்பான உணவு தயாரிக்கப்பட்டு மண்ணுக்கு படையலிட்டு அம்மக்கள் உண்டுள்ளார். தமிழர் கொண்டாடும் பொங்கலும் உழவர் திருநாளே! வோல்கா பகுதி மக்கள் ரஷ்யாவில் கொண்டாடியதும் உழவர் திருநாளே! உலக சமுதாயங்கள் பலவற்றில் உழவர் திருநாள் கொண்டாடப்பட்டு வந்துள்ளது.

ஸ்லாவ் மக்களும் வேளாண் பணி துவங்கும்போதும் முடிவுறும் போதும் விழாக் கொண்டாடி வந்துள்ளனர். கதிரவனை வழிபட்டுள்ளனர். உதயசூரியன் வழிபாடு உலகெங்கும் காணக்கிடப்பதாகும். பல்வேறு சமுதாயங்களும் உதயசூரியன் எங்கள் இதய சூரியனே என்று வழிபட்டு வந்துள்ளனர். Svarog, Dazhdbog, Khors ஆகிய மூவரும் சூரியக்கடவுளரே! பெருண் என்ற இடிக்கடவுளும் ஆடுமாடுகளைப் பாதுகாக்கும் கடவுளாக Veles (volos) இருந்தார். வேலசு வேலவனாகியதா? வேலவன் வேலசு ஆகியதா? முருகனை வழிபடுவோர் மூளையை பிய்த்துக் கொள்ளட்டும். 

ஸ்காண்டிநேவியப் பகுதிகளில் மக்கள் வழிபாட்டுமுறை பற்றி அறிய யயயய என்ற பாடல் தொகுப்பு நமக்குப் பயன்படுகிறது. 11(அ) 12ம் நூற்றாண்டில் Saemund Sigfussion என்பவரால் தொகுக்கப்பெற்ற பாத்தொகுப்பு நூல்மூலம் பல செய்திகளை நாமறியலாம். கடவுள்கள் உலகை ஆளம் முன்பு இயற்கைக்கு மாறான சக்திகள் மண்ணுலக ஆண்டதாக நம்பினர். Jotnars எனப்படும் அத்தகு மனித ஆற்றலிலும்மேம்பட்ட சக்திகளை கடவுள்கள் கொன்றனராம். YMIR என்ற பூதத்தைக் கொன்று வானத்தையும் பூமியையும் கடவுள் படைத்தாராம். மரங்களில் இருந்து மனிதர்களை கடவுள் படைத்தாராம்.

இயற்கையின் ஆற்றல் ஒவ்வொன்றையும் பேரழிவு ஒவ்வொன்றையும் கடவுள்களாக உருவகித்து மெக்சிகோவில் வழிபட்டனர். முக்கியமாக மூன்று கடவுள்களில் ஒன்று Quetzalcoatl. பச்சைத்தோலுடைய பாம்பே மெக்சிகோவில் வழிபட்ட கடவுள். பாம்பு வணக்கம் பாரெங்கும் பரவி இருந்தது. திராவிடர்கள தஸ்யூக்கள் என்றார்கள் ஆரியர்கள். நாகர்கள் எனவும் திராவிடர்கள் குறிப்பிடப்பட்டனர். நாகவழிபாடு இங்கு நிலவி வந்துள்ளதற்ககு நாக்பூர், நாகப்பட்டினம் முதலிய ஊர்ப்பெயர்களோடு ஒவ்வொரு பாம்புப்புற்றுக்கும் துணிசுற்றி மஞ்சள்நீர் தெளித்து வழிபட்டு வருவதே உணர்த்தும். கடவுள்கள் பலவாக இருந்து கடவுள்களை ஒருங்கிணைக்க முற்பட்ட போது சிவன் கழுத்தில் பாம்பும் தலைமுடியில் பிறையும் ஏறிக்கொண்டன. காளை மீது சிவன் ஏறிக்கொண்டார். நாகமும் திங்களும் தீயும், தீ வடிவினனான சிவனும், காளமாடும் தனித்தனிக் கடவுளாக இருந்து ஒருங்கிணக்கப்பட்டவர்கள். கதிரவன் வழிபாடு போன்றே திங்கள் வழிபாடும் இருந்ள்ளது. இதில் வியப்புக்குரிய ஒற்றுமை சிவன் தலைமீதுள்ள பிறைக்கும் பிறை தொழும் இசுலாமிய மரபுக்கும் இடை நிலவும் ஒற்றுமைக் கூறுகளே ஆகும்.

சீனாவில் Sheng-Nong எனும் பெரிய தெய்வீக உழவனை வழிபட்டனர். முதல் உழவுப் பணி தொடங்கும் போது அக்கடவுள் வழிபடப் பட்டது நமது பொங்கல் திருநாளுடன் ஒப்புக் நோக்கத்தக்க.

ரஷ்ய அறிஞர் Sergei Tokarov மதங்களின் வரலாறு பற்றி எழுதுகையில் வந்தேறு குடிகளாம் ஆரியர்கள குறிப்பிட்டு ஈரானிய மேட்டு நிலப்பகுதிகளிலிருந் இந்தியாவுக்கு வந்தவர்கள் என்கிறார். மொகஞ்சரரோ நாகரிகத்தை உருவாக்கிய இந்தியாவின் பூர்வீகக் குடிகளுடன் பண்பாட்டு தொடர்பு அற்றவர்கள் என்கிறார். அவர் ஆரியர்கள் முதலில் சிந்துச் சமவெளியையும் வடமேற்கு இந்தியாவையும் கைப்பற்றியபின் கங்கைப் பாசனப்பகுதிகளையும் கைப்பற்றினார்கள் என்கிறார். 33 கடவுள்களை ஆரியர்கள் வழிபட்டதாகச் சொல்லும் அந்த ரஷ்ய அறிஞர் இருக்கு வேதத்தில் 3399 கடவுள்கள் ஓரிடத்தில் சொல்லப்படுவதயும் சுட்டிக் காட்டியுள்ளார். எழுத்தில் வடிக்காத வாய்மொழியாக மட்டுமே பேசப்பட்ட மொழியை கொண்டிருந்த ஆரியர்களிடம் தோற்ற திராவிடர்களில் அறிஞர்கள் தம்மொழியின் மாண்ப என்றென்றும் நிலைநாட்ட எண்ணங் கொண்டு தமிழ் எழுத்க்கள் 33 ஐ ஆரியக் கடவுளாக்கி அமைதியான முறையில் பழி தீர்த்க் கொண்டதாக எம். சுந்தரராசு எனும் அறிஞர் அழகுற ஆய்ந்து எழுதியுள்ளார். 12 உயிர், 18 மெய், 1 குற்றியலுகரம், 1 குற்றியலிகரம் என்னும் 33 தமிழ் எழுத்க்களை ஆரிய வந்தேறிகள் தலைமீது கடவுளாக ஏற்றிச் சுமக்கச் செய்த பெயர் தெரியாத அந்தத் திராவிடவியல் அறிஞர்கள தமிழுலகம் நினைத்து நினைத்து போற்ற வேண்டும்.

நந்திவர்மன், பொதுச்செயலர், திராவிடப்பேரவை, புதுச்சேரி, இந்தியா

Advertisements